செல்போனில் சிறுமிகளின் குளியல் விடியோக்கள்.. காமுக பொறுக்கிகளின் கொடூரம்.. வேலூரில் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள பாக்கியம் துத்திப்பட்டு கிராமத்தை சார்ந்த 15 வயதாகும் சிறுமி, அங்குள்ள அரசு பள்ளியில் பயின்று வருகிறார். இவரது வீட்டின் பின்புறத்தில் திறந்தவெளி குளியலறை இருக்கும் நிலையில், இங்கு குளித்துக்கொண்டு இருந்த சிறுமியை, அதே பகுதியை சார்ந்த மூன்று இளைஞர்கள் மறைந்திருந்து அலைபேசியில் விடியோவாக பதிவு செய்துள்ளனர். பின்னர் சிறுமியிடம் இது குறித்த விடியோவை காண்பித்து, தங்களின் ஆசைக்கு இணங்கக்கூறி கூறியுள்ளனர்.

இதனால் கடுமையான அதிர்ச்சியடைந்த மாணவி, விஷயத்தை வெளியே சொல்ல தைரியம் இல்லாமல் உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி வீதிக்கே வந்துள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் காப்பாற்ற முயற்சி செய்த நிலையில், உடலின் வெப்பம் தான் மாரியம்மன் கோவில் அருகே சுருண்டு விழுந்துள்ளார். இதன்பின்னர் சிறுமியை மீட்ட அக்கம் பக்கத்தினர், வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். 

சுமார் 90 விழுக்காடு தீக்காயத்துடன் சிறுமி மருத்துவமனையில் அனுமதியான நிலையில், இந்த விஷயம் தொடர்பாக பாகாயம் காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு சென்ற காவல் துறையினர், மாணவியின் வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளனர். இது குறித்த வாக்குமூலத்தில், சிறுமி தெரிவித்தது பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்த வாக்குமூலத்தில், நான் குளித்துக்கொண்டு இருந்ததை விடியோவாக பதிவு செய்தனர். பின்னர் எனது சித்தப்பாவுக்கு தொடர்பு கொண்டனர். நான் அலைபேசியை எடுத்து பேசுகையில், நீ மற்றும் உனது சித்தப்பாவை பழிவாங்க நீ குளிப்பதை வீடியோ எடுத்துள்ளோம். இந்த அலைபேசி எண்ணிற்கு விடியோவை அனுப்பியுள்ளோம். நாங்கள் கூறுவதை நீ கேட்கவில்லை என்றால் விடியோவை இணையத்தில் பதிவு செய்வோம் என்று கூறி அழைப்பை துண்டித்துள்ளனர்.

இதன்பின்னர் வாட்சாப்பை பார்க்கையில் நான் குளிக்கும் வீடியோ இருந்தது. இதனை டெலிட் செய்ய கூறி அவர்களுக்கு மீண்டும் தொடர்பு கொண்ட நிலையில், ரூ.5 ஆயிரம் பணம் கேட்டனர். பின்னர் சித்தியிடம் நடந்ததை கூறி பணம் கேட்ட நிலையில், சித்தி காவல் துறையின் கவனத்திற்கு இதனை எடுத்து செல்லலாம் என்று கூறினார். இதற்குள் மீண்டும் தொடர்பு கொண்ட கொடூரன்கள் வேலூர் கோட்டைக்கு அழைத்தனர். 

அங்கு வர முடியாது என்று நான் கூறவே, துத்திப்பட்டு ஏரிக்கரைக்கு அழைத்துள்ளனர். அவதூறாகவும் பேசினார்கள். அங்கே சென்ற சமயத்தில் மூவரில் ஒருவனை பிடித்துவிட்டு சத்தம் போடவே, இரண்டு பேர் பயந்து தப்பியோடினர். அவனிடம் இருந்த அலைபேசியை எடுத்து, நான் குளிக்கும் விடியோவை டெலிட் செய்தேன். அதில் எனது பாட்டி குளிக்கும் வீடியோ மட்டுமல்லாது, பல பெண்களின் விடீயோக்களும் இருந்தது. 

அனைத்து வீடியோ காட்சிகளையும் நான் டெலிட் செய்து கொண்டு இருக்கும் போதே, சிக்கிய ஒருவனும் எனது தலையில் கல்லால் தாக்கிவிட்டு தப்பி சென்றான். இதன்பின்னர் வீட்டிற்கு வந்து தற்கொலை முடிவெடுத்தேன் என்று கூறியுள்ளார். இந்த வாக்குமூலத்தை அடிப்படையாக வைத்து காவல் துறையினர் பூனைக்கண்ணன் என்கிற ஆகாஷ், பாலாஜி, கணபதி என்கிற தாமஸ் ஆகியோரை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் வேலூர் பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vellore sexual culprit arrest by police


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal