கலெக்டரிடம் மனுக்கொடுக்க வந்த பெண்..  புள்ளிங்கோ கட்டிங் போட்ட மகன்களுக்கு கலெக்டர் அட்வைஸ்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது ஒரு பெண் அவருடைய இரு மகன்களுடன் சேர்ந்து மனு கொடுக்க வந்துள்ளார். 

தன்னுடைய கணவர் இறந்து விட்ட காரணத்தால் குடும்பம் நடத்த வழி ஏதுமில்லை இல்லை. எனவே, வேலை கொடுத்து உதவும்படி அவர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியனிடம் நேரில் மனு கொடுத்தார். 

இந்த மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்துள்ளார். அந்த திருமணமான பெண்ணுடன் வந்திருந்த மகன்கள் இருவரும் புள்ளிங்கோ ஸ்டைலில் முடிவெட்டி இருந்தனர். இதைக் கண்ட மாவட்ட ஆட்சியர் இது போல முடி வெட்டுவது நல்லது இல்லை. 

நன்றாக ஒழுங்கான முறையில் முடி திருத் செய்து கொண்டால் மட்டும் தான், உங்களுக்கு நல்ல பழக்கவழக்கங்கள் வரும். முதலில் இது போன்ற ஸ்டைலில் முடிவெட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். உடனே இதை மாற்றுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore collector order about Hair Cut to boys


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->