அடிக்கடி நடக்கும் விபத்து.. வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் குமாரவேல் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "குடியாத்தம் மற்றும் பள்ளிகொண்டா இடையிலான சாலையில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருப்பதால் வாகனங்களில் செல்வோர் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் போன்றவர்கள் பாதிக்கப்படுகின்றனர். 

மேற்கண்ட வழித்தடத்தில் அடிக்கடி சிறுசிறு விபத்துகள் ஏற்படுகிறது. எனவே கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் அதி கனரக சரக்கு வாகனங்கள் கீழ்கண்ட மாற்றுப்பாதையில் இயங்க உத்தரவிடப்படுகிறது.

 ஆந்திர மாநிலத்தில் இருந்து பரதராமி வழியாக திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மார்க்கமாக இயக்கப்படும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் அதி கனரக சரக்கு வாகனங்கள் பரதராமியிலிருந்து உமராபாத் -ஆம்பூர் வழியாக செல்லவேண்டும். 

கிருஷ்ணகிரியில் இருந்து வரும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் அதி கனரக சரக்கு வாகனங்கள்  உமராபாத் ஆம்பூர் வழியாக ஆந்திர மாநிலம் செல்ல வேண்டும்.

 திருவண்ணாமலையில் இருந்து ஆந்திர மாநிலம் செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் மற்றும் அதி கனரக சரக்கு வாகனங்கள் வேலூர் வழியாக ஆந்திர மாநிலம் செல்ல வேண்டும்.

 இப் போக்குவரத்து மாற்றங்கள் நாளை 4.8. 2022 முதல் நடைமுறைக்கு வருகிறது." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vellore Collector about route changes


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->