வேளச்சேரி மரண குழி | மேலும் ஒருவரின் சடலம் மீட்பு! - Seithipunal
Seithipunal


சென்னை வேளச்சேரியில் கேஸ் பங்க் அருகே கட்டடம் இடிந்து விழுந்து விபத்தில், மேலும் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

50 அடி பள்ளத்தில் சிக்கியவர்களில் ஒருவரின் உடல் இன்று அதிகாலை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், மேலும் ஒருவரின் சடலத்தை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது.

இந்த நிலையில், உடல் அடையாளம் காணப்பட்டு, மேட்டுக்குழுவினரால் அவரின் உடல் மேலே எடுத்துவரப்பட்டுள்ளது.

எப்படி விபத்து நடந்தது?

சென்னையில் நிஜாம் புயல் காரணமாக பெய்த கனமழையால் கடந்த டிசம்பர் 4ம் தேதி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வேளச்சேரியில் எரிவாயு நிலையம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட 40 அடி பள்ளத்தில் வெள்ளநீர் புகுந்ததது.

அப்போது அருகில் கட்டுமான தொழிலாளர்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக குடியிருப்பு குழிக்குள் சரிந்து விழுந்தது.

இந்த விபத்தில் சிக்கிய 8 பேரில், 6 பேரை மீட்புக் குழுவினர் மீட்ட நிலையில், இன்று 2 பேர் (தொழிலாளர் நரேஷ் மற்றும் மேற்பார்வையாளர் ஜெயசீலன்) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

velachery Michuang


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->