#சென்னை || பூமிக்குள் துடிக்கும் உயிர்கள்.? 72 மணி நேரத்தை கடந்த மீட்பு பணி.!! வேதனையில் உறவினர்கள்.!! - Seithipunal
Seithipunal


மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள ஏரிகளில் நீர் நிரம்பி வழிகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேளச்சேரி 5 பர்லாங் சாலையில் உள்ள எரிவாயு நிலையத்தின் அருகே 40 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப்பட்டது. 

நேற்று முன்தினம் சென்னையில் பெய்த கனமழையின் காரணமாக அந்தப் பள்ளம் அருகே அமைக்கப்பட்டிருந்த ஊழியர்கள் தங்கும் தற்காலிக அறைகள் வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டு பள்ளத்தில் விழுந்தது. 

இந்த விபத்தில் 4 ஊழியர்கள் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது. அவர்களின் இரண்டு பேர் மீட்கப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பேர் தற்காலிக அறையில் சிக்கி உள்ளனர். சென்னையில் பெய்து வரும் கனமழையின் காரணமாக வெள்ளநீர் 40 அடி ஆழ பள்ளத்தில் நிரம்பியதால் மீட்பு பணி மேற்கொள்வதில் தொய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் இன்று காலை முதல் பள்ளத்தில் இருக்கும் வெள்ளை நீரை அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.. 40 அடி ஆழ பள்ளத்தில் 21 வயதாகும் நரேஷ் என்பவரும், கட்டுமான மேற்பார்வையாளர் ஜெயசீலன் என்பவரும் சிக்கியிருப்பது தற்போது தெரியவந்துள்ளது. 

இவர்களின் உறவினர்கள் விபத்து ஏற்பட்ட பகுதியில் தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கட்டுமான பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் வெள்ள நீர் நிரம்பியதால் விபத்தில் சிக்கியவர்கள் உயிரோடு இருக்கிறார்களா? அல்லது உயிரிழந்து விட்டார்களா? என்பது உறுதியாக தெரியவில்லை.

விபத்து ஏற்பட்ட சில மணி நேரத்தில் மீட்பு பணியானது துவங்கி இருந்தால் உள்ளே சிக்கியுள்ள இருவரையும் உயிருடன் மீட்டிருக்கலாம் எனவும், 72 மணி நேரத்தை கடந்த பின்பு அவர்களின் நிலை என்ன என தெரியவில்லை எனவும் உறவினர்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Velachery gas bunk rescue operation continues more than 72 hours


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->