சனாதான சக்திகள் அகற்றப்படும் - விசிக-வின் தேர்தல் அறிக்கை வெளியானது! - Seithipunal
Seithipunal


விடுதலை சிறுத்தை கட்சியின் தேர்தல் அறிக்கையை என்ற கட்சியின் தலைவர் திருமாவளவன் வெளியிட்டார். 

உயர்சாதியினருக்கான இட ஒதுக்கீடு ரத்து, சாதி வாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட முக்கிய வாக்குறுதிகளுடன் கூடிய தேர்தல் அறிக்கையை இன்று, சிதம்பரத்தில் திருமாவளவன் வெளியிட்டார். 

அதில் முக்கிய அம்சங்களாக, வகுப்புவாத பிரிவினையை தூண்டும் சட்டத்திருத்தங்களை நீக்கப்பட வேண்டும். ஆளுநர் பல்கலைக்கழக வேந்தராக நியமிக்க கூடாது.

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை அறிவு திருநாளாக அங்கீகரிக்க வேண்டும். தேர்தல் ஆணையர் நியமன திருத்த சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும்.

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். பட்டியல் இன மற்றும் பழங்குடியினருக்கு தனி வங்கி அமைக்க வேண்டும்.

உயர் சாதியினருக்கான இட ஒதுக்கீடு ரத்து செய்ய வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும்.

உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும். ஜனநாயகத்திற்கு எதிரான சனாதான சக்திகள் அகற்றப்படும்.

இலங்கை உடனான வெளியுறவு கொள்கையில் தமிழக நலன் பாதுகாக்கப்படும் உள்ளிட்ட வாக்குறுதிகளுடன் 62 பக்க தேர்தல் அறிக்கையை திருமாவளவன் வெளியிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

VCK Manifesto 2024


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->