திமுக ஒரு டிராமா அரசு - வானதி சீனிவாசன் பரபரப்பு பேச்சு.!!
vanathi srinivasan say dmk drama govt
தமிழக அரசு நடத்திய கல்வி விழா ஒரு புதிய நாடகம் என்று கோயம்புத்தூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது;
“தமிழக அரசு நடத்திய கல்வி விழா ஒரு புதிய நாடகம். மக்களை ஏமாற்ற துறைக்கு சம்பந்தமில்லாத சினிமா துறையினரை வைத்து பேச வைத்துள்ளனர். இது திமுகவிற்கு புதிதல்ல, திராவிட மாடல் அரசு என்றாலே டிராமா அரசு தான்.

முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் திட்டம் துவங்குவதற்கும், அந்த திட்டம் மக்களிடம் கொண்டு சேர்வதற்கும் வித்தியாசம் இருக்கிறது. கேமரா முன் நல்லாதான் இருக்கு. டிராமா அரசாங்கத்தின் நடவடிக்கைதான் தமிழக அரசின் கல்வி விழா.
அரசு பள்ளிக் கூடங்களை மூடுவது, ஆசிரியரக்ள் பற்றாக்குறை, வகுப்பறை இல்லாமல் மரத்தடியில் பள்ளி நடத்துவது, பள்ளி குழந்தைகளுக்கு நடக்கும் பாலியல் வன்கொடுமைகள் பள்ளிகளிலே சாதி ரீதியான மோதல் இதையெல்லாம் கல்வியில் சிறந்த மாநிலத்தில் சேர்த்துக் கொள்வார்களா?” என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
English Summary
vanathi srinivasan say dmk drama govt