ஒவ்வொரு மக்களும் பயன்பெறும் வகையில் அதிமுக செயல்பட்டு வருகிறது!! அதிமுக அமைச்சர் பேட்டி!! - Seithipunal
Seithipunal


செய்தியாளர்களை சந்தித்த வைத்திலிங்கம் எம்.பி, "இன்னும் சிறிது மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. இதற்காகவே திமுக தலைவர் ஸ்டாலின் கிராமசபை என்ற பெயரில் நாடகம் ஒன்றை அரங்கேற்றி கொண்டிருக்கிறார் என வைத்திலிங்கம் எம்.பி தெரிவித்துள்ளார். 

மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் பொங்கல் பரிசு பெற வேண்டும் என்பதே ஜெயலலிதாவின் நோக்கம் அதையே முதல்வர் எடப்பாடி தற்பொழுது செய்து கொண்டிருக்கிறார். அனைத்து மக்களும் பயன்பெற அவேண்டும் என்றே நீதி மன்றத்தில் போராடி வருகிறோம். 

கிராமசபை என்பது செயலலிதா ஆட்சி காலத்தில் இருந்து மக்களின் அடிப்படை தேவைகளை கேட்டறிந்து பூர்த்தி செய்வதாகும். தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கப்பட உள்ளது. 

ஒவ்வொரு மக்களும் எந்த வகையில் பயன் பெற வேண்டுமோ? அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அதிமுக அரசு செய்து வருகின்றது. மக்களிடம் ஆய்வு மேற்கொண்டு அவர்களின் குறைகள் தீர்க்கப்பட்டு வருகிறது. சில சமயங்களில் நிதி நிலைமையை அறிந்து மக்களுக்கு செய்ய வேண்டியவற்றை செய்யும் என மக்களிடம் தெரிவித்து கொள்கிறேன்" என கூறியுள்ளார்.  

English Summary

vaithilingam MP says admk do all in TN


கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
கருத்துக் கணிப்பு

உலக கோப்பையை இங்கிலாந்திடம் கொடுத்தது பற்றிய உங்களின் கருத்து
Seithipunal