விரைவில் மருத்துவ துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா. சு தகவல்.! - Seithipunal
Seithipunal


விரைவில் மருத்துவ துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் - அமைச்சர் மா. சுப்ரமணியன் தகவல்.!

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு அருகே  தொண்டராம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.50 லட்சம் மதிப்பில் வட்டார பொது சுகாதார ஆய்வகம் கட்டப்பட்டது. இந்த ஆய்வகத்தை இன்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் திறந்து வைத்தார். 

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- "மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலம் தற்போது வரை ஒரு கோடியே 60 ஆயிரம் பேர் பயன் பெற்றிருக்கிறார்கள். மாநிலத்தில் முழுவதும் மருத்துவத் துறையில் காலி பணியிடங்கள் உள்ளது. 

இந்தக் கலிப்பாணியிடங்களில் எம்.ஆர்.பி மூலம் 1021 மருத்துவர்கள், 983 மருந்தாளுனர்கள், 1066 சுகாதார ஆய்வாளர்களை பணியில் அமர்த்தும் நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. கடந்த வாரமே பணியாணை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் 14 மருத்துவர்கள் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருக்கிறார்கள். 

அந்த மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு சென்று சுமூக முடிவு எடுக்கப்பட்டு பின்னர் மருத்துவ பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vacancies filled soon of medical course minister subramaniyan info


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->