பெண்களை குறிவைக்கும் மர்ம கும்பல்.. வீட்டில் தனியாக இருக்கும் பெண்களே உஷார்..!  
                                    
                                    
                                   unknown groups theft in home
 
                                 
                               
                                
                                      
                                            சென்னை மற்றும் சென்னையில் உள்ள புறநகர் பகுதிகளில் திருட்டு சம்பவங்கள் என்பது தொடர்கதையாகியுள்ளது. மேலும், பகல் வேலைகளிலேயே திருட்டு, இரவில் பெண்கள் ஆடையில் வந்து திருட்டு என்று தொடர்ந்து கொண்டே செல்கிறது. 
வீட்டில் தனியாக இருக்கும் பெண்கள் மற்றும் வயதானவர்களை குறிவைத்து அவ்வப்போது வழிப்பறி கொள்ளை போன்றவையும் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், கண்காணிப்பு காமிராக்கள் அதிகளவில் பொறுத்தப்பட்டுள்ளதால் குற்றவாளிகளை கண்டறியும் செயலும் எளிமையாகியுள்ளது. 
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பீர்கான்கரனை பகுதியில் உள்ள சீனிவாசன் நகர் மற்றும் மூவேந்தர் நகர் பகுதியில், வீட்டில் தனியாக இருந்த பெண்களை குறிவைத்து மர்ம கும்பல் கத்தி முனையில் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளது.  
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர்களின் புகாரின் பேரில், தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த காவல் துறையினர், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் அலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
                                     
                                 
                   
                       English Summary
                       unknown groups theft in home