மத்திய இணை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்தார் எல். முருகன்: தமிழ்நாட்டில் பாஜகவை வலுப்படுத்த நடவடிக்கை! - Seithipunal
Seithipunal


மத்திய இணை அமைச்சராகப் பதவி வகித்து வந்த எல். முருகன், தனது பதவியை ராஜிநாமா செய்வதாக இன்று (அக். 13) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

2029-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்காகத் தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) மேலும் வலுப்படுத்தும் நோக்கில், முழுநேரக் கட்சிப் பணியாற்றவே இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். தனது ராஜிநாமா தொடர்பாக 5 பக்கங்கள் அடங்கிய கடிதம் ஒன்றை பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார்.

முன்னதாக, புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தனது பதவியை ராஜிநாமா செய்துவிட்டு முழுநேரக் கட்சிப் பணியில் ஈடுபட்டது போல, தற்போது எல். முருகனும் தனது மத்திய அமைச்சர் பதவியைத் துறந்து கட்சிப் பணிகளில் முழுவீச்சில் இறங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Union Minister L Murugan Resigns to Focus on Tamil Nadu BJP Party Work Ahead of 2029 Elections


கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!



Advertisement

கருத்துக் கணிப்பு

இடைத்தேர்தல் முடிவுகள் யாருக்கு பெரும் பின்னடைவு...!


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->