மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் சென்னை வருகை திடீர் ரத்து..!
Union Home Minister Amit Shah visit to Chennai suddenly cancelled
தமிழகத்தில் அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி அமைந்த பிறகு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கடந்த மாதம் மதுரைக்கு வருகை தந்திருந்தார். அப்போது பா.ஜனதா நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும் போது இனி தமிழகத்துக்கு அடிக்கடி வருவேன் என்று அமித்ஷா கூறியிருந்தார்.
இதன்படி வருகிற 07-ந்தேதி சென்னையை அடுத்துள்ள காட்டாங் கொளத்தூரில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு அமித்ஷா வருகை தர இருப்பதாக தகவல்கள் வெளியானது. அத்துடன், அங்கு நடைபெறும் கட்சி கூட்டத்தில் பங்கேற்று விட்டு அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணியை பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட இருந்ததாக கூறப்பட்டது.
அத்துடன் அவரது சென்னை பயணத்தின் போது கூட்டணி கட்சி தலைவர்களை சந்தித்து பேச்சு வார்த்தை நடத்துவார் கூறப்பட்ட நிலையில், அவரின் சென்னை வருகை ரத்தாகியுள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Union Home Minister Amit Shah visit to Chennai suddenly cancelled