#தமிழகம் | அரிய வகை கருஞ்சிறுத்தைகள் கண்டுபிடிப்பு! வெளியான சிசிடிவி காட்சிகள்! - Seithipunal
Seithipunal


நீலகிரி மாவட்டம், உதகை அருகே, அரியவகை இரண்டு கருஞ்சிறுத்தைகள் உலா வந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது.

உதகையில் அமைந்துள்ள மத்திய அரசின் வானியல் ஆராய்ச்சி மைய வளாகத்தில், அரிய வகையாக கருதப்படும் இரண்டு கருஞ்சிறுத்தைகள் உணவை தேடி உலா வந்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட வனப்பகுதிகளில் வனவிலங்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும்,  சிறுத்தைகள், கரடி, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் உணவு தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு வந்த வண்ணம் இருப்பது, பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில், உதகையில் அமைந்துள்ள மத்திய அரசின் வானிலை ஆராய்ச்சி மைய வளாகத்தில் நேற்று இரவு இரண்டு கருஞ்சிறுத்தைகள் நுழைந்தன.

உணவு தேடியே இந்த இரண்டு கருஞ்சிறுத்தைகளும் உலா வந்தது முதல் கட்ட தகவலில் தெரியவந்துள்ளது. இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே வனத்துறை அதிகாரிகள் இந்த கருஞ்சத்தைகளை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Udhagai Karunjsiruthai CCTV Video


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->