பணியில் இருந்த காவலர்களை சராமாரியாகத் தாக்கிய இளைஞர்கள் - பல்லடத்தில் பரபரப்பு.! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, பல்லடம் அருகே சின்னக்கரை பகுதியில் புத்தாண்டை முன்னிட்டு காவல்துறையினர் நேற்று தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த இரண்டு இளைஞர்களை காவல்துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, மதுபோதையில் அவர்கள் காவல்துறையினரை சரமாரியாக தாக்கி உள்ளனர். இதைத் தொடர்ந்து, போலீசார் இரண்டு பேரையும் காவல்துறையினர் பல்லடம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

அந்த விசாரணையில், இரண்டு பேரும் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த சரத்குமார், நீலகண்டன் என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இரண்டு பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பிறகு சிறையில் அடைத்தனர். 

வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்களை மதுபோதையில் இருந்த இளைஞர்கள் சராமாரியாக தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two youths arrested for attck police officers in palladam


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->