காஞ்சிபுரம் || பள்ளி மாணவர்களிடையே மோதல் - முன் விரோதம் தான் காரணமா? - Seithipunal
Seithipunal


காஞ்சிபுரம் || பள்ளி மாணவர்களிடையே மோதல் - முன் விரோதம் தான் காரணமா?

காஞ்சிபுரம் மாவட்டத்தில் சாலவாக்கம் அருகே தண்டலம் பகுதியில் வசிக்கும் ரவிச்சந்திரன் என்பவரின் மகன், ஒரக்காடு பேட்டை அரசு மேல்நிலைப்பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளிக்கு சைக்கிளில் சென்று வரும் இவர் காலாண்டு தேர்வு முடிந்த உற்சாகத்தில் சக மாணவர்களுடன் சைக்கிளில் தண்டலத்திற்கு திரும்பி வந்துக்கொண்டிருந்தார். 

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இருவர், பிளஸ் 2 மாணவரை வழிமறித்து கைவசம் வைத்திருந்த கத்தியால் தலை மற்றும் உடலில் வெட்டிவிட்டு அவர்கள் தப்பிச் சென்றனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் வந்த மாணவர்கள் மற்றும் அப்பகுதியில் வசிப்போர் காயமடைந்த பிளஸ் 2 மாணவரை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த சம்பவத்தில் மாணவர் படுகாயமடைந்ததோடு, சம்பவத்தைத் தடுக்க முயன்ற சக மாணவர் ஒருவரும் படுகாயமடைந்துள்ளார். அவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இருவரிடமும் சாலவாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

அதில், "வெட்டுப்பட்ட தண்டலம் பிளஸ் 2 மாணவருக்கும் அதே பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மற்றொரு மாணவருக்கும் இடையே எழுந்த முன்பகையே இந்த மோதலுக்கு காரணம் என்று தெரியவந்தது. இதையடுத்து இருதரப்பு மாணவர்களுக்கும் ஆதரவாக வேறுசிலரும் திரண்டதில் அப்பகுதியில் பதற்றம் எழுந்துள்ளது. இதனால், போலீசார் அனைவரையும் அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

two school students addmitted hospital for clash in kanchipuram


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->