சேலம் அருகே சோகம் - திருவிழாவில் பட்டாசால் ஏற்பட்ட விபத்து - 2 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


சேலம் மாவட்டம் இரும்பாலை அருகே உள்ள கொல்லப்பட்டி கிராமத்தில் குழி இருசாயி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்தத் திருவிழாவின் போது வாணவேடிக்கை நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தது. 

இதற்கான பட்டாசை இளவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வைத்திருந்தார். அப்போது, வானத்தில் வெடித்து சிதறிய வெடியின் தீப்பொறி ஒன்று இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த பட்டாசு பாக்சின் மீது பட்டு வெடித்து சிறியது.

இதனால், இருசக்கர வாகனத்தின் மீது உட்கார்ந்து இருந்த சக்திவேல் மற்றும் திருவிழாவை பார்க்க வந்திருந்த ஓமலூர் கமலாபுரம் கிழக்கத்திக்காடு பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் கவின் என்பவரும் படுகாயமடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து இரும்பாலை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  தற்போது, வெடிவிபத்து நேர்ந்த பதிவான சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two peoples injured for firecrackers blast in salem


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->