மாணவிகளுக்கு நேர்ந்த கொடுமை ! 2 ஆசிரியைகள் சஸ்பெண்டு! - Seithipunal
Seithipunal


திருப்பூர் மாவட்டதில்  தாராபுரம் அருகே  குமாரபாளையம் என்று கிராமம் உள்ளது. அங்கு  அரசு நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.  இந்த பள்ளியில் சுற்றுப்புற கிராமத்தில் இருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர்.  கருங்காலி  வலசு கிராமத்தை சேர்ந்த மாணவிகள் இருவர்  6-ம் வகுப்பில் பயின்று வருகின்றனர். 

இந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பு  நடுநிலையை பள்ளியின் தலைமை ஆசிரியை இளமதி ஈஸ்வரி மற்றும் ஆசிரியை சித்ரா என்ற இருவரும் மாணவிகளை பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய சொன்னதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் தொடர்பாக சிறுமிகள் பேசிய ஆடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலானது. 

இந்து குறித்து திருப்பூர் மாவட்ட ஆட்சி தலைவர் கிறிஸ்து ராஜ் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.  அதனை தொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில், தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசன், வட்டாட்சியர் கோவி ந்தசாமி,மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா ஆகியோர் சம்பந்தப்பட்ட நடுநிலைப்பள்ளிக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். 

மாணவிகள் இரண்டு பேரையும்  ஆசிரியைகள் கடந்த ஒரு மாதமாக பள்ளியின் கழிவறையை சுத்தம் செய்ய வைத்தது விசாரணையில் அம்பலமானது. 

இதையடுத்து ஆசிரியைகள் இருவரையும் பணியிடை நீக்கம் செய்வதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் தெரிவித்தார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

two female teachers suspend


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->