உங்கப்பா பிறந்த இந்த ஊருல சாலை வசதியே இல்லையே சார் - திருவாரூரில் தவெக தலைவர் விஜய்..!!
tvk leader speech in thiruvarur
இன்று மதியம் நாகப்பட்டினத்தில் தனது பிரச்சாரத்தை முடித்த விஜய் அடுத்ததாக திருவாரூர் மாவட்டத்திற்கு சென்று அங்கு பிரசார வாகனத்தில் ஏறிய விஜய் விவசாயிகளை ஆதரிக்கும் விதமாக தோளில் பச்சை துண்டு அணிந்து வந்தார்.
அதன்பிறகு, தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர்," திருவாரூர் தியாகராஜன் கோவில், திருவாரூர் தேர் தான் நியாபகம் வரும், திருவாரூர் தேர் இந்த மண்ணின் அடையாளம்.
நீண்ட நாள் ஓடாமல் நின்ற திருவாரூர் தேரை இயக்கியது நான் தான் என பெருமை தட்டியவர் யார் என உங்களுக்கு தெரியும்.
ரொம்ப நாளா ஓடாம இருந்த தேரை ஓடவைத்ததாக மார்தட்டிக் கொண்டார். அவரது மகனோ நன்றாக ஓட வேண்டிய தமிழ்நாடு என்ற தேரை கட்டையை போட்டு ஓட விடாமல் செய்கிறார்.
திருவாரூர் மாவட்டம் தங்களின் சொந்த மாவட்டம் என சொல்லிக் கொள்பவர் கருவாடாக காய்வதை கண்டு கொள்ளவில்லை. எல்லா இடத்திற்கும் உங்க அப்பா பெயரை வைக்கிறீர்கள், உங்கள் அப்பா பிறந்த இந்த திருவாரூரில் ஒரு அடிப்படை சாலை வசதி இல்லையே சார். திருவாரூரில் உள்ள மெடிக்கல் கல்லூரி தான் வைத்தியம் பார்க்கும் நிலையைில் உள்ளது" என்றுத் தெரிவித்தார்.
English Summary
tvk leader speech in thiruvarur