டிடிவி தினகரனை அதிரவைத்த மோசடி.. சொந்த கட்சிக்குள் இருந்த வினை.. போர்கொடிதூக்கிய பெண்கள்.! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மார்த்தாண்டம் குன்னத்தூர் பகுதியை சார்ந்தவர் ரமணி. இவர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் பொறுப்பாளராக இருந்து வருகிறார். இந்த பதவியினை வைத்து அம்மாவட்டத்தில் உள்ள ஏழை குடும்ப பெண்களை ஏமாற்றி பணம் சம்பாரித்து வந்துள்ளார். 

தன்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரி என்று அறிமுகப்படுத்திய ரமணி, மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தலின் பேரில் பலருக்கும் லோன் வாங்கி தருவதாக கூறியுள்ளார். மேலும், லோன் கிடைத்தவுடன் நீங்கள் இப்போதைய ஏழ்மை நிலையில் இருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருக்கலாம் என்றும் ஆசை வார்த்தை கூறியுள்ளார். 

மேலும், ஒரு லோனுக்கு குறைந்தபட்ச தொகையாக ரூ.3 ஆயிரம் வசூல் செய்த பின்னர், ரூ.1 இலட்சம் கடன் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில், பணம் கொடுத்த நபர்களிடம் தங்களுக்கு வரவுள்ள பணத்தை விஜிலென்ஸ் காவல் அதிகாரி மற்றும் புதுக்கடை காவல் ஆய்வாளர் பிடித்து வைத்துள்ளதாகவும், அவர்களுக்கு சிறிதளவு பணம் கொடுத்தால் பணம் வந்துவிடும் என்றும் நாடகம் ஆடியுள்ளார். இவ்வாறாக பல லட்சங்களை வசூல் செய்துள்ளார். 

பணத்தை கொடுத்தவர்கள் மீண்டும் பணத்தை கேட்டால் தற்கொலை செய்து விடுவதாக நாடகமாடி, கொலை மிரட்டல் விடுத்தும் வந்துள்ளார். ரமணியிடம் ஏமார்ந்த பலரும் சொந்த கட்சியினர் என்பதால் செய்வதறியாது திகைத்து வந்துள்ளனர். ரமணி முதலில் ஒரு பெண்மணியை தனது கைக்குள்போட்டுவிட்டு, பின்னர் அவர்களை வைத்து அனைவரையும் கவர்ந்து வந்துள்ளார். 

கடந்த 3 வருடமாக இந்த பாணியில் பல குடும்பங்களிடம் மொத்தமாக கோடிக்கணக்கில் வசூல் செய்துள்ள நிலையில், பணத்தை மீட்டு தர வேண்டும் என்று பாதிக்கப்பட்ட மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர். இந்த விசயத்திற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பாக நடவடிக்கை எடுத்து, எங்களின் பணத்தை மீட்டு தர வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட அக்கட்சியினர் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TTV Dhinakaran Party Kanyakumari Member Ramani Cheats girl about Loan


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->