ஜாமீனில் வெளிவந்த டிடிஎஃப் வாசன்: மீண்டும் பைக் ஓட்டுவேன் என அடம்!  - Seithipunal
Seithipunal


சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் பிரபல யூடியூபரும் பைக் ரேஸருமான டிடிஎஃப் வாசன் கடந்த செப்டம்பர் மாதம் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது கார் ஒன்றை முந்திச் செல்ல முயன்று விபத்தில் சிக்கினார். 

இதில் அவரது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்பாக போலீசார் டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போக்குவரத்து துறை லைசென்ஸ் உரிமையை 10 வருடத்திற்கு ரத்து செய்தது. 

டிடிஎஃப் வாசன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

ஜாமீன் கிடைத்த நிலையில் நேற்று சிறையில் இருந்து வெளியில் வந்த டிடிஎஃப் வாசன் சர்வதேச லைசென்ஸ் வைத்து மீண்டும் இரு சக்கர வாகனம் ஓட்டுவேன் என தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் தெரிவித்திருப்பதாவது, ''பைக்கும் ஓட்டுவேன். படத்திலும் நடிப்பேன். ஆர்வத்தை இப்போதும் விட்டுக் கொடுக்க முடியாது. 

சர்வதேச லைசென்ஸ் எடுக்கலாம். இல்லையென்றால் மேல் முறையீடு செய்யலாம். கை போனதை விட லைசென்ஸ் போனதற்குத்தான் கண் கலங்கினேன். 

எல்லாவற்றிலும் உறுதியாக இருப்பேன். ஆனால் 10 வருடம் லைசென்ஸ் ரத்து என்றால் சற்று வருத்தமாக தான் உள்ளது'' என தெரிவித்தார். 

இந்நிலையில் சர்வதேச லைசென்ஸ் வைத்து தமிழகத்தில் வாகனம் ஓட்ட முடியாது என காவல்துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TTF Vasan release 


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->