பெண் ஆசை கண்ணை மறைக்க., கணவன் இருப்பதையும்  மறந்து அரங்கேற்றிய சம்பவம்.!  - Seithipunal
Seithipunal


ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் தோராயன் மலைப்பகுதியில் தங்கமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர், சுபாஷ் தொண்டு நிறுவனம் என்ற ஒன்றை அவர் நடத்தி வந்துள்ளார். அங்கே இவருடன் பல பெண்கள் பணிபுரிந்து வருகின்றனர். அந்த நிறுவனத்தில் அவரது பக்கத்து வீட்டுப் பெண் ஒருவரும் பணிபுரிந்து வந்துள்ளார்.

தங்கமணி அந்த பெண்ணின் மீது ஆசை கொண்டு மிகவும் அன்பாக இருப்பது போல் நடித்து நெருக்கம் ஆகி இருக்கின்றார். இந்நிலையில் அந்த பெண்ணிற்கு திருமண ஏற்பாடுகள் நடந்தது. திருமணம் நடைபெற்றால் தன்னை விட்டு சென்று விடுவார் என்று எண்ணிய தங்கமணி திருமணத்தை நிறுத்த பல்வேறு சதி திட்டங்களை தீட்டி முயற்சித்தார்.

ஆனால் இதையும் மீறி அந்த பெண்ணின் திருமணம் நடைபெற்று முடிந்தது. அவருடைய கணவருடன் நெருங்கக் கூடாது என்பதால் அடிக்கடி போன் செய்து நீண்ட நேரம் பேசி தொந்தரவு செய்து வந்துள்ளார். இதன் காரணமாக அந்த பெண்ணின் கணவர் ஆத்திரம் அடைந்து அந்த பெண்ணை கண்டித்து வந்துள்ளார்.

இந்நிலையில், சமீபத்தில் சென்னையில் இருக்கும் அந்த பெண்ணின் வீட்டிற்கு தங்கமணி சென்று அவரைக் கீழே வரச்சொல்லி அழைத்துள்ளார். நம்பி வந்த பெண்ணை காரில் கடத்த முயற்சிக்கவே இதனை கண்டு கொண்ட அவரது கணவர் காரை மடக்கி பிடித்து உடனடியாக அவருடைய மனைவியை காப்பாற்றியுள்ளார். பின்னர் கடத்த வந்த கும்பலை காவல்துறையிடம் ஒப்படைத்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trying to kidnap chennai girl


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal