பருவமழை முன்னெச்சரிக்கை - திருவல்லிக்கேணி காவல்நிலையம் தற்காலிகமாக மூடல்.! - Seithipunal
Seithipunal


சென்னையில் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளதால் திருவல்லிக்கேணி காவல்நிலையம் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனால், நாளை தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை கனமழையும் நாளை மறுநாள் அதி கன மழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கிறது. 

இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னை திருவல்லிக்கேணி காவல் நிலையம் தற்காலிகமாக மூடபடவுள்ளது. இந்த காவல்நிலையக் கட்டிடம் பழமையான கட்டிடம் என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன் படி காவல் நிலையம் ஓமந்தூரார் அரசு மருத்துவமனை வளாகத்தில் தற்காலிகமாக செயல்படும். கடந்தாண்டு பெய்த மழையில், தேனாம்பேட்டை உள்ளிட்ட காவல் நிலையங்களில் மழைநீர் புகுந்தது குறிப்பிடத்தக்கது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

trplicane police station temporary closed for rain


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->