திருச்சி லலிதா ஜுவல்லரி கொள்ளையன், போலீசாருக்கு கொடுத்த இன்ப அதிர்ச்சி! - Seithipunal
Seithipunal


கடந்த சில தினங்களுக்கு முன் திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தின் அருகே உள்ள லலிதா ஜுவல்லரியில் நடைபெற்ற திருட்டு சம்பவத்தில் தேடப்பட்டு வந்த சீர்தோப்பு சுரேஷ் திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் தற்போது சரணடைந்துள்ளார். 

கடந்த அக்டொபர் 2 ஆம் தேதி திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் அருகே அமைந்துள்ள லலிதா ஜுவல்லரியின் பின்புறமாக சுவரில் துளையிட்டு 13 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டன. இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மணிகண்டன் என்பவன் திருவாரூரில் பிடிபட்ட பின், திருடர்கள் ஒருவர் பின் ஒருவராக கைது செய்யப்பட்டு வரும் நிலையில் கொள்ளை சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான சீர்தோப்பு சுரேஷ் தேடப்பட்டு வந்தார். 

அவர் தலைமறைவாகி இருந்த நிலையில் ஏழு நாட்களுக்கு பிறகு இன்று அவர் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நீதிமன்றத்தில் இன்று சரணடைந்துள்ளார். இன்னும் இந்தக் கொள்ளை சம்பவத்தில் முக்கிய சூத்திரதாரியான முருகனை காவல்துறையினர் தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் போலீசாரால் தேடப்பட்டு வந்த சுரேஷ் காவல்துறைக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் தானாகவே வந்து சரணடைந்து உள்ளார். போலீசார் அவரை நெருங்கிவிட்டதால் அவரே சரணடைந்திருக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் முருகனும் சரணடைவதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

trichy seerathoppu suresh surrender in sengam court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->