பல பெண்களை ஏமாற்றிய காசி வழக்கில் திடீர் திருப்பம்.. டிஜிபி அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் கணேசபுரம் பகுதியை சார்ந்த 26 வயது இளைஞர் காசி. இவரது தந்தை இறைச்சி வியாபாரம் செய்து வரும் நிலையில், தந்தையின் வியாபாரத்தில் தனது உடலை வளர்த்து வந்த காமுகனின் எண்ணம் கேவலமாக இருந்துள்ளது. 

முகநூலில் போலி கணக்கு துவங்கி, பல பெண்களை ஏமாற்றி வந்துள்ளான். சமூக வலைத்தளத்தில் தன்னை சமூக ஆர்வலராகவும், தொழில் அதிபராகும், ரோமியோகவும் அடையாளப்படுத்தி, கோட் சூட் புகைப்படத்துடன் புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளான். 

மேலும், இவனது புகைப்படத்தை பார்த்து மயங்கிய பெண்களிடம், பல கவிதைகளை பேசி மனதை கவர்ந்து ஏமாற்றிய நிலையில், சென்னையை சேர்ந்த பெண் மருத்துவர் இவனிடம் ஏமார்ந்து பல லட்சக்கணக்கான பணத்தையும் பறிகொடுத்துள்ளார். இந்த பெண் காவல் நிலையத்தில் அளித்த புகாருக்கு பின்னர், காசியின் சுயரூபம் பல வெளிவந்தது. 

காசி குறித்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியாகி வரும் நிலையில், சுமார் 80 பெண்களை தமிழகம் முழுவதும் காதலித்து ஏமாற்றி வந்தது தெரியவந்துள்ளது. தான் ஏமாற்றும் பெண்களை மிரட்டி அதன் மூலமாக தனது இல்லத்தை நான்கு மாடி அளவில் கட்டியும் முடித்துள்ளான். பெண்களை மிரட்டியும், அவர்களின் குடும்பத்தாரிடம் பணம் பறித்து வந்தது தெரியவந்தது.

இந்நிலையில், சமூக வலைதளம் மூலமாக பெண்களை ஏமாற்றிய நாகர்கோவில் காசி வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

transition of kachi case to cbcid


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->