10 நிமிடத்திற்கு ஒரு ரெயில்: பொங்கல் நாள்களில் மெட்ரோ அட்டவணை...! முழு விவரம் வேண்டுமா...?
train every 10 minutes Metro schedule during Pongal holidays Want full details
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறை நாட்களைக் காரணமாகக் கொண்டு, மெட்ரோ ரெயில் சேவை ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி நேற்று மெட்ரோ ரெயில் சேவைகள் குறைக்கப்பட்ட நிலையில், இன்று மற்றும் நாளையும் 10 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.

வழக்கம்போல், மெட்ரோ ரெயில் சேவை அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை தொடர்கிறது. அதிகாலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரையும், இரவு 8 மணி முதல் 10 மணி வரையும் 10 நிமிட இடைவெளியில் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
மேலும், பயணிகள் வருகை அதிகமாக இருக்கும் பகல் நேரத்தை கருத்தில் கொண்டு, மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ சேவை வழங்கப்படுகிறது.
இரவு நேரங்களில் பயணிகள் எண்ணிக்கை குறைவதால், இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்கள் பலர் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளதாலும், அரசு அலுவலகங்கள் மற்றும் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாலும், பயணிகள் எண்ணிக்கை குறைந்துள்ளதை கருத்தில் கொண்டு இந்த சேவை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary
train every 10 minutes Metro schedule during Pongal holidays Want full details