குற்றால அருவியில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க தொடரும் தடை...!
Tourists banned from bathing at Courtala Falls
கடந்த 3 தினங்களாக, தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் சாரல் மழை காரணமாக குற்றால அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது.

இதனிடையே, நேற்று சாயங்காலம் குற்றாலம் மெயின் அருவியில், எதிர்பாராதவிதமாக தண்ணீர் அளவு மிகவும் அதிகரிக்க தொடங்கியது. இதனால்,பாதுகாப்பு கருதி,அருவியில் குளித்துக் கொண்டிருந்த சுற்றுலா பயணிகளை அருவி கரையிலிருந்து காவலர்கள் அப்புறப்படுத்தினர்.
இதைத்தொடர்ந்து வனப்பகுதியில் சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடையானது,நேற்று மாலை முதல் இன்று வரை தொடர்ந்து குற்றாலம் மெயின் அருவியில் மட்டும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதில் மற்ற அருவிகள் அனைத்திலும், விடுமுறை தினம் என்பதால் சுற்றுலா பயணிகள் காலை முதலே ஆர்வத்துடனும் மகிழ்ச்சியுடனும் குளித்து வருகின்றனர்.
English Summary
Tourists banned from bathing at Courtala Falls