பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இடம் ..தமிழகத்திற்கு ? - Seithipunal
Seithipunal


பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான டாப் 10 இடத்தில இந்த பட்டியலில், தமிழகம் 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. 

பெண்களுக்கான கல்வி, வேலைவாய்ப்பு ஆகியவை நாட்டில் பெருகி காணப்படுகின்றன. அவற்றை பெண்களும் சரியாக பயன்படுத்தி கொள்கிறார்கள். விவசாயம் முதல் விண்வெளி துறை வரையும் சாதனை பெண்கள் படைத்து வருகிறார்கள். பெண்களுக்கு பணிபுரியும் பகுதியில் அவர்களுக்கு ஏற்ற சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புகள், கிடைக்க பெறுவது அவசியம். இவற்றை அடிப்படையாக கொண்டே  இந்தியா ஸ்கில்ஸ் என்ற பெயரில் நடப்பு ஆண்டுக்கான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டு உள்ளது. 

அதில், பெண்கள் பணிபுரிய பாதுகாப்பான மற்றும் விரும்ப கூடிய டாப் 10 இந்திய மாநிலங்கள் பற்றிய விவரங்கள் வெளியாகி உள்ளன. உலகளாவிய கல்வி மற்றும் திறன் தொடர்பான தீர்வுகளுக்கான வீல்பாக்ஸ் என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டு உள்ளது.

இதில், ஆந்திர பிரதேசம் முதல் இடத்திலும், கேரளா 2-ம் இடத்திலும் மற்றும் குஜராத் 3-ம் இடத்திலும் உள்ளன. இந்த பட்டியலில், தமிழகம் 4-ம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. மராட்டியம், டெல்லி, உத்தர பிரதேசம், கர்நாடகா, மத்திய பிரதேசம் மற்றும் அரியானா ஆகியவை அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளன.

இதன்படி, பணிபுரியும் இடங்களில் வாழ்வதற்கேற்ற விசயங்கள் எளிமையான முறையில் கிடைக்க பெறுதல் மற்றும் பாதுகாப்பு ஆகியவை பெண்களின் தேர்வாக உள்ளது.

பெண் பணியாளர்களுக்கு ஆதரவான சுற்றுச்சூழலை அதிகம் கொண்டிராத மாநிலங்கள், பெண் பணியாளர்கள் முன்னேற்றத்திற்காக பங்காற்றுவதில் குறைவான வளர்ச்சி விகிதங்களை கொண்டுள்ளன.

அதனால், பணி வாய்ப்புகளை வழங்குவோர், இந்த தரவுகளை அடிப்படையாக கொள்ளலாம். அப்போது, அதிக பாதுகாப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாக பணியிடங்களை உருவாக்கி கொள்ள முடியும். அவற்றை வழிகாட்டியாக கொள்ளலாம் என அறிக்கை தெரிவிக்கின்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Top 10 safe places for women to work for Tamil Nadu?


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->