ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்! சென்சுரி அடித்த தக்காளி விலை.! - Seithipunal
Seithipunal


ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து பெய்த மழை மற்றும் தக்காளி உற்பத்தி சீசன் இல்லாத காரணத்தால் தக்காளியின் வரத்து குறைந்துள்ளது. இதனால் தக்காளியின் விலை கிடுகிடுவென்று உயர்ந்து கொண்டே உள்ளது.

இதைத்தொடர்ந்து திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளியின் விலை 100 ரூபாயை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. 

தக்காளி வரத்து குறைந்ததன் காரணமாக தினந்தோறும் 500 முதல் 700 தக்காளி பெட்டியில் வரவு வருகின்றது. இதனால் விலை படிப்படியாக உயர்ந்து 14 கிலோ கொண்ட ஒரு தக்காளி பெட்டி 1,200 ரூபாய் வரை விலை போனது.

மேலும் தக்காளியின் விலை உயர்வு தொடர்ந்து ஒரு மாதத்திற்கு இருக்கும் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomato price increased in ottanchathiram market


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->