தமிழகத்தில் நுழைந்த தக்காளி காய்ச்சல் -மருத்துவ ஆய்வு இதழ் தகவல்..! - Seithipunal
Seithipunal


மருத்துவ ஆய்வு இதழில், சிறு குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பாதிப்பு இந்தியாவில் அதிகரித்து வருவதாக, குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டனில் இருந்து வெளியாகும், 'லான்செட்' என்ற மருத்துவ ஆய்வு இதழில், மருத்துவ நிபுணர்கள் எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளதாவது:

இந்தியாவில் இளம் குழந்தைகளை தாக்கும் தக்காளி காய்ச்சல் பரவல் அதிகரித்து வருகிறது.

கேரளாவில் இதுவரை எண்பத்து இரண்டு குழந்தைகளுக்கும், ஒடிசாவில் இருபத்து ஆறு குழந்தைகளுக்கும் இதன் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடும் காய்ச்சல், உடலில் சிவப்பு நிறக் கொப்புளங்கள் உருவாகுவது ஆகியவை இதற்கு அறிகுறிகளாகும்.

இந்த கொப்புளங்கள் தக்காளி அளவுக்கு பெரிதாகும் என்பதால், இது தக்காளி காய்ச்சல் என அழைக்கப்படுகிறது.

தற்போது கேரளா, ஒடிசா, தமிழகத்தில் இதன் தாக்கம் இருந்துள்ளது. இது, ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளையே அதிகம் தாக்கும்.

அதே நேரத்தில் தற்போது இந்தியாவில், ஒன்பது வயதுக்குட்பட்ட குழந்தைகளிடமும் இதன் பாதிப்பு உள்ளது.இந்தக் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் மிக வேகமாக பரவக் கூடியது.

அதனால், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். நோய் அறிகுறி ஏற்பட்ட உடனேயே சிகிச்சை அளிக்க வேண்டும்.என்று அதில் கூறப்பட்டுள்ளது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tomato fever has entered Tamil Nadu - medical research journal information..!


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->