ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வேட்புமனு வாபஸ் பெற இன்று கடைசி நாள்..!! - Seithipunal
Seithipunal


ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த இடைத்தேர்தலுக்கான வேட்புனு தாக்கல் கடந்த பிப்ரவரி 7ம் தேதி உடன் நிறைவடைந்த நிலையில் பிப்ரவரி 8ம் தேதி வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை நடைபெற்றது.

வேட்பாளர்கள் தங்கள் வேட்புமனு நிராகரிக்கப்பட்டால் அதற்கு மாற்று வேட்புமனு என மொத்தம் 121 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் அதன் மீது பரிசீலனை ஈரோடு மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்று முடிந்தது.

இதனைத் தொடர்ந்து வேட்புமனு ஏற்கப்பட்ட அனைத்து வேட்பாளர்களுக்கும் ஒப்புதல் சீட்டு வழங்கப்பட்டது. வேட்பாளர்கள் தங்களின் வேட்பு மனுக்களை வாபஸ் பெற இன்று கடைசி நாள்.

இன்று மாலைக்குள் வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இதனை அடுத்து வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டு இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட பிறகு ஈரோடு கிழக்கு தேர்தல் களம் சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Today last day for Erode East byelection nomination withdraw


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->