பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கு விண்ணப்பிக்காமல் இருப்பவர்களுக்கு ஓர் அறிய வாய்ப்பு.!!
today last date for apply bed and med
தமிழகத்தில் உள்ள 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகள் என்று மொத்தம் 21 கல்லூரிகளில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன. இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதி பெற பி.எட் படிப்பு அவசியமாக உள்ளது.
அதன்படி, 2025-26 கல்வி ஆண்டிற்கான விண்ணப்பம் ஜூன் 20 முதல் தொடங்கி ஜூலை 21 வரை பெறப்பட்டது. இதற்கான தரவரிசை வெளியாகி, முதல் சுற்று கலந்தாய்வு முடிவடைந்தது. இதன் பிறகு 2 அரசு கல்லூரிகளில் 49 இடங்கள் மற்றும் 12 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 530 இடங்கள் என மொத்தம் 579 இடங்கள் இன்னும் நிராப்பப்படாமல் உள்ளன.
இந்த இடங்களுக்கு ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது. அதற்கு இன்றே கடைசி நாளாகும். ஆகவே விருப்பம் உள்ளவர்கள் https://www.tngasa.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
English Summary
today last date for apply bed and med