90's கிட்ஸ் எப்படியோ? அப்படிதான் 2K கிட்ஸ் - அதிர்ச்சி கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதி.!! - Seithipunal
Seithipunal


சென்னையில், ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் ஒருவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ஆஜரான இளைஞர் ஆபாச படங்களை பார்த்ததாக ஒப்புக் கொண்ட நிலையில், குழந்தைகள் சம்பந்தப்பட்ட ஆபாச படங்களை பார்க்கவில்லை என்றும் ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்திலிருந்து விடுபட கவுன்சிலிங் செல்ல விரும்புவதாகவும் இளைஞர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், ஆபாச படங்கள் பார்த்தாக இளைஞர் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து தனிப்பட்ட முறையில் பார்ப்பது குற்றமல்ல. மற்றவர்களுக்கு அனுப்பி வைப்பது தான் சட்டப்படி குற்றம்.

90's கிட்ஸ் எப்படி மது, புகைக்கு அடிமையாகி இருந்தார்களோ?, அதேபோல் 2K கிட்ஸ் ஆபாச படங்களுக்கு அடிமையாகியுள்ளனர். அவர்கள் மீது பழி சொல்வதற்கு பதில், இந்த பழக்கத்தில் இருந்து மீட்பதற்கு அறிவுரைகள் வழங்கும் அளவுக்கு சமூகம் பக்குவமடைய வேண்டும். 

பள்ளிகளில் இருந்து அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆபாச படங்களை பார்ப்பதால் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் டீன் ஏஜ் வயது குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர் என்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today hearing youth watch obscene vedio case in chennai high court


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->