செம்மண் கடத்தல் வழக்கு - பொன்முடிக்கு எதிராக தீர்ப்பு அமையுமா? எதிர்பார்ப்பில் அரசியல் களம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த 2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை நடந்த தி.மு.க. ஆட்சியில் விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அனுமதியை மீறி செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் உள்ளிட்ட எட்டு பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில், குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார்.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாத், உள்ளிட்ட மூன்று பேர் மட்டும் ஆஜராகினர். முன்னாள் அமைச்சர் பொன்முடி, கவுதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன், சதானந்தன் உள்ளிட்ட நான்கு பேரும் ஆஜராகவில்லை. 

இதேபோல், நேற்றைய தினம் அரசு தரப்பு சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. அதனால், இந்த வழக்கு குறித்த விசாரணை இன்று நடைபெற உள்ளது. இன்றைய தினம் இந்த வழக்கு ஒரு முடிவுக்கு வருமா? என்ற எதிர்பார்ப்பில் திமுக தொண்டர்கள் இருந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today hearing of ponmudi semman quarry case


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->