போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை கோரிய வழக்கு - இன்று விசாரணை.! - Seithipunal
Seithipunal


நேற்று முதல் தமிழகத்தில் போக்குவரத்து தொழிற்சங்க ஊழியர்கள் பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.வி.கங்கா புர்வாலா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று காலையில் மூத்த வழக்கறிஞர் பட்டாபி ரகுராமன் ஆஜராகி முறையிட்டார்.

அதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், நேற்று பிற்பகல் 2.15 மணிக்கு வழக்கு விசாரணைக்கு எடுப்பதாகவும், அதற்குள் வழக்கை தாக்கல் செய்யும் நடைமுறையை முடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

ஆனால், உயர்நீதிமன்ற பதிவுத்துறையில் வழக்கை தாக்கல் செய்ய காலதாமதம் ஆனதால், மாலை 4.45 மணிக்கு மூத்த வழக்கறிஞர் பட்டாபி ரகுராமன் ஆஜராகி, வழக்கை தாக்கல் செய்து விட்டதாகவும், விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

ஆனால், அப்போது நேரம் கடந்து விட்டதால், இந்த வழக்கு விசாரணை இன்று காலையில் முதல் வழக்காக விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், இதே கோரிக்கையை வலியுறுத்தி சோழிங்கநல்லூரைச் சேர்ந்த பால் கித்தியோன் என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today hearing of ban transport employees strike case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->