மதிமுக பம்பரம் சின்னம் வழக்கு - இன்று வெளியாகும் முக்கிய அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதியில் தி.மு.க. கூட்டணியில் ம.தி.மு.க. சார்பில் துரைவைகோ போட்டியிடுகிறார். இவர் தனக்கு பம்பரம் சின்னம் ஒதுக்க கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் விண்ணப்பித்தார் ஆனால் அதுகுறித்து பரிசீலிக்கப்படவில்லை. இதையடுத்து ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் அவசர வழக்கை தாக்கல் செய்தார். 

இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது, பம்பரம் சின்னம் பொதுப்பட்டியலில் உள்ளதா, இல்லையா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, 'பம்பரம் சின்னம் பொது சின்னமாகவோ, ஒதுக்கீட்டு சின்னமாகவோ வகைப்படுத்தப்படவில்லை. ம.தி.மு.க., அளித்த விண்ணப்பத்தின் மீது புதன்கிழமையான நாளை காலைக்குள் முடிவு எடுக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிபதிகள், 'கடந்த சட்டமன்ற தேர்தலில் ம.தி.மு.க., வேட்பாளர்கள் பம்பரம் சின்னத்தில் போட்டியிட்டு உள்ளனர். அதனால், திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் ம.தி.மு.க.வுக்கு பம்பரம் சின்னம் கேட்டு அளிக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தின் மீது நாளை காலை 9 மணிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் தகுந்த முடிவு எடுக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணையை நாளை பிற்பகலுக்கு தள்ளிவைக்கிறோம்' என்று உத்தரவிட்டனர்.

அதன் படி இந்த வழக்கில் மதிமுகவுக்கு பம்பரம் சின்னம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையம் இன்று காலைக்குள் நல்ல முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், உயர்நீதிமன்றத்திலும் இன்று நடைபெறும் வழக்கு விசாரணை மதிமுகாவுக்கு சாதகமாகவே இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

today hearing mtmk leader vaiko bambaram symbol case


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->