மாற்றுத் திறனாளிகளுக்கு அமைச்சர் சொன்ன குட் நியூஸ்..!! - Seithipunal
Seithipunal


மாற்றுத்திறனாளிகள் எளிதாக பயணம் மேற்கொள்ளும் வகையில் தமிழக அரசின் போக்குவரத்து துறை சார்பில் 150 புதிய தாழ்தள பேருந்துகள் வாங்கப்படும் என அமைச்சர் சிவசங்கர் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் பயணிகள் பேருந்து சேவையை பூர்த்தி செய்யும் வகையில் மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்துவதற்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 150 புதிய தாழ்த்தல பேருந்துகளை ரூ. 135.48 கோடி மதிப்பீட்டில் தமிழக அரசு நிதியுடன் கொள்முதல் செய்து வருவதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.

இந்த முயற்சியின் வாயிலாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் மூலம் வழங்கப்படும் பொது போக்குவரத்து சேவைகள் தமிழகத்தை முதன்மை நிலைக்கு உயர்த்திடும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tnstc busy 150 news buses for handicapped


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->