விரைவு பேருந்து கட்டணம் ரூ.90 வரை உயர்வு.!! அதிர்ச்சியில் பொதுமக்கள்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் பேருந்துகளின் கட்டணம் ரூ.90 வரை உயர்த்தப்பட்டுள்ளது. சமீபத்தில் பேருந்து கட்டணம் உயர்த்தப்படும் என அவ்வப்போது தகவல் வெளியாகி வந்த நிலையில் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் தற்போது சென்னை கோயம்பேட்டில் இருந்து திருச்சி செல்ல வார இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய நாட்களில் 730 ரூபாயும், மற்ற நாட்களில் சென்னையில் இருந்து திருச்சி செல்ல 660 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண உயர்வானது மற்ற நாட்களை விட வார இறுதி நாட்களில் ரூபாய் 90 வரை உயர்த்துவதாக தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வானது தற்போது சென்னையில் இருந்து தொலைதூரம் செல்லக்கூடிய குளிர்சாதன வசதி கொண்ட பேருந்துகளுக்கு மட்டுமே பொருந்தும் என தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tnstc ac super fast bus fare rs90 increased


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->