இன்று டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு.. தேர்வர்கள் இதெல்லாம் எடுத்து செல்ல தடை.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டிஎன்பிஎஸ்சி குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள 92 பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஜூலை மாதம் 21ஆம் தேதி வெளியிட்டது.

இதில் 18 துணை கலெக்டர்கள், 26 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 13 கூட்டுறவு சங்க துணை பதிவாளர், 25 வணிகவரி உதவி ஆணையர், 7 ஊரக மேம்பாடு உதவி இயக்குனர், 3 மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஆகியவை அடங்கும்.

இந்த பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், கடந்த மாதம் அக்டோபர் 30-ந்தேதி நடைபெறுவதாக இருந்த தேர்வு சில காரணங்களுக்காக தள்ளிவைக்கப்படுவதாக டி.என்.பி.எஸ்.சி. அறிவித்தது.

இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட முதல்நிலைத் தேர்வு இன்று (சனிக்கிழமை) காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை தேர்வு நடைபெற உள்ளது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தேர்வர்கள் தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் வசதிக்காக தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் சிறப்பு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNPSC Group 1 Primary Exam today Candidates are not allowed to carry electronic items


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->