பாஸ்போர்ட் கிடைச்சாச்சு.. "ஒரு வாரத்திற்குள்" இலங்கை செல்லும் ராஜிவ் குற்றவாளிகள்.!! - Seithipunal
Seithipunal


ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் உச்ச நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட நிலையில் அவர்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்புவதில் சிக்கல் ஏற்பட்டதால் அவர்கள் அனைவரும் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். 

அவர்களில் சாந்தன் உடல் நலக்குறைவை ஏற்பட்டு சில மாற்றங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் திருச்சி சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ளவர்கள் தங்களை மீண்டும் இலங்கைக்கு அனுப்பி வைக்க வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அந்த மனு விசாரணைக்கு வந்த போது கொலை குற்றவாளிகள் விடுவிக்கப்பட்ட பிறகு இலங்கைக்கு அனுப்புவதில் என்ன தயக்கமென சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி இருந்தது. மேலும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் எனவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. 

இந்த வழக்கை இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பையஸ்க்கு இலங்கை துணை தூதரகம் பாஸ்போர்ட் வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tngovt response Rajiv Gandhi accused visit srilanka within one week


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->