மக்களே ரெடியா? தமிழக அரசின் பொங்கல் மளிகை பரிசுத் தொகுப்புகள் குறித்து வெளியான உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழக அரசு, பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் பொங்கல் தொகுப்புகளை விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது.  

பொங்கல் தொகுப்புகள் மூன்று வகைகளில் வழங்கப்படுகின்றன:  அதன்படி,

பொங்கல் தொகுப்பு - ₹199  
சிறப்பு பொங்கல் தொகுப்பு - ₹499  
பெரும் பொங்கல் தொகுப்பு - ₹999  

இந்த தொகுப்புகளில் பச்சரிசி, அரைக்கிலோ பாகுவெல்லம், 100 கிராம் பாசிப்பருப்பு, 5 கிராம் ஏலக்காய், முந்திரி, 50 கிராம் ஆவின் நெய் ஆகியவை அடங்கும்.  

கூட்டுறவு மொத்த பண்டக சாலைகள் மற்றும் பிரதம மந்திரி கூட்டுறவு பண்டக சாலைகளில் இத்தொகுப்புகள் விற்பனைக்கு வரும். மேலும், கூட்டுறவு விற்பனை சங்கங்களிலும், சில்லரை விற்பனை நிலையங்களிலும் இப்பரிசுத் தொகுப்புகள் விற்க திட்டமிடப்பட்டுள்ளது.  

இந்த உத்தரவால் பொங்கல் பண்டிகை முன்னிட்டு பொதுமக்களுக்கு முக்கிய உதவியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TNGovt Pongal Maligai Porukal


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->