#BREAKING || பள்ளிக் கல்வித் துறை இயக்குனர்கள் பணியிட மாற்றம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு..!! - Seithipunal
Seithipunal


தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகள் திறக்கப்படும் தேதி இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்திய பிறகு ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை ஜூன் 12ஆம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 14ஆம் தேதியும் பள்ளிகள் திறக்க உள்ளன.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறையில் பணியாற்றி வந்த 5 இயக்குனர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் தமிழ்நாடு பள்ளிக் கல்விப் பணியில் வகுப்பு ஒன்றை சார்ந்த இயக்குனர் மற்றும் அதனை அடுத்த பணியிடங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி பணியிடங்களில் பணி மாறுதல் வழங்கி அரசு ஆணையிடுகிறது.

அதன்படி தொடக்க கல்வி இயக்குனர் அறிவொளி பள்ளி கல்வி இயக்கத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி கூடுதல் திட்ட இயக்குனர் ராமேஸ்வரமுருகன் ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் உறுப்பினர் செயலர் கண்ணப்பன் தொடக்கப்பள்ளி இயக்கத்தின் இயக்குனராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் செயலாளராக இருந்த பழனிச்சாமி பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்கத்தின் இயக்குனர் குப்புசாமி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணி கழகத்தின் உறுப்பினர் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த பணியிட மாற்றத்திற்கான ஆணையை அரசு முதன்மைச் செயலாளர் காகர்ல உஷா பிறப்பித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt ordered school education department directors transfer


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->