நாங்குநேரி விவகாரம்.! நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்தது தமிழக அரசு.!! - Seithipunal
Seithipunal


திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் பட்டியலினத்தைச் சேர்ந்த முனியாண்டியின் மகன் சின்னதுரை மற்றும் அவருடைய மகள் சந்திரா செல்வி ஆகியோர் இரண்டு நாட்களுக்கு முன்பு அவர்களது வீட்டில் இரவு 10:30 மணிக்கு அதே பள்ளியைச் சேர்ந்த மாணவர்களால் சாதி ரீதியில் அரிவாளால் போன்ற கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய 7 சிறார்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு அரசு கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பட்டியலின மாணவன் தாக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு நபர் குழு அமைத்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த குழுவானது பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே சாதி, இன உணர்வுகள் காரணமாக உருவாகும் வன்முறைகளை தவிர்த்து, நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்கு வழிமுறைகள் வகுக்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt constituted one man committee headed by Justice Chandru regarding Nanguneri issue


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->