வெங்காயம் கிலோ ரூ.30 மட்டுமே.!! தமிழக அரசு அதிரடி நடவடிக்கை.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது முதல் வெங்காயத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி விற்பனையில் வெங்காயம் ரூ. 70 வரை விற்பனை செய்யப்படுகிறது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மற்றும் நடமாடும் விற்பனை வாகனங்கள் என 14 மையங்கள் மூலம் இன்று முதல் வெங்காயம் ஒரு கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

உள்ளூர் சந்தைகளில் வெங்காயம் கிலோ ரூ.80 முதல் 90 வரை விற்பனையாவதால் வெங்காயத்தின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் தேவைக்கேற்ப வெங்காயம் விற்பனையை விரிவுபடுத்த தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. குறுகிய காலத்திற்குள் வெங்காயம் விலையை முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவுத் துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt arrange Onion sale Rs30 kg in green farm shops


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->