வளர்ச்சி திட்ட பணி கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம்.. தமிழக அரசு அதிரடி உத்தரவு! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களுக்கு வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கண்காணிப்பு அதிகாரிகளை தலைமை செயலாளர் இறையன்பு நியமனம் செய்துள்ளார்.

தமிழகத்தில் அரசின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு கண்காணிக்கும் வகையில் மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இரு தினங்களுக்கு முன்பு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு பொறுப்பு அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு அதிகாரிகளாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டு வருகின்றனர்.

சென்னை தவிர 25 மாவட்டங்களுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டனர். இதற்கிடையே மீதமுள்ள 12 மாவட்டங்களுக்கான வளர்ச்சி துறை திட்ட பணிகளுக்கு கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்து தமிழ்நாடு தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த கண்காணிப்பு அதிகாரிகள் மாவட்டங்களில் துறை வாரியாக செயல்படுத்தப்படும் வளர்ச்சி திட்டங்கள், பணிகள் உள்ளிட்டவற்றை கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள்.

அதன்படி அரியலூர், கோவை, கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், சேலம், திருப்பூர் ஆகிய மாவட்டங்களுக்கு வளர்ச்சி துறை திட்ட பணிகளுக்கான கண்காணிப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TNgovt appointed development project work monitoring officers


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->