மாணவர்களே..!! இனி "சனிக்கிழமைகளில் ஸ்கூல்" போகனும் ..!! எந்தெந்த தேதி தெரியுமா.? - Seithipunal
Seithipunal


மிக்ஜாம் புயல் மற்றும் மழை காரணமாக கடந்த மாதம் சென்னை உட்பட 4 மாவட்டங்கள் முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டது. வீடுகளில் தண்ணீர் புகுந்து பொதுமக்களின் வாழ்வாதாரம்  கேள்விக்குறியாக இருந்தது. மேலும், மின்தடை ஏற்பட்டதால், வீட்டில் இருந்து வெளியே வர முடியாமல் , அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்தனர்.

பல இடங்களில் குடியிருப்புகளில் தண்ணீர் சூழ்ந்ததால் பேரிடர் மீட்பு குழுவினர் துரிதமாக செயல்பட்டுமக்களை மீட்டு முகாம்களில் தங்க வைத்தனர். புயல் ஓய்ந்த பிறகு பொதுமக்கள் தங்களது இருப்பிடத்துக்கு சென்ற போது பல இடங்களில் தண்ணீர் தேங்கியே இருந்தது.

புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசு பள்ளிகள், திருமண மண்டபங்கள் உள்பட வளாகங்களில் தங்க வைக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதில் அரையாண்டு தேர்வு சில மாவட்டங்களில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து தேர்வு நடைபெறாத பள்ளிகளுக்கு கடந்த 3ம் தேதி முதல் அதைரயாண்டு தேர்வு தொடங்கியது.

இந்நிலையில் அடுத்த 4 சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, சென்னை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "மிக்ஜாம் புயல் மற்றும் கனமழை காரணமாக சென்னையில் பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

வெள்ள பாதிப்பு காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய வேலை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி, 4 வாரங்களுக்கு சனிக்கிழமைகளில் அனைத்து பள்ளிகளுக்கும் வேலை நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஜனவரி 6, 20 ஆகிய தேதிகள் மற்றும் பிப்ரவரி 3, 17 ஆகிய தேதிகளில் பள்ளிகள் இயங்கும். இதுகுறித்து மாணவர்களுக்கு தெரிவித்து, அனைத்து மாணவர்களும் பள்ளி வருவதற்கான பணிகளில் தலைமை ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்" என அறிவுறுத்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

tngovt announced govt schools operate on 4 Saturdays


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->