வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகியை கைது செய்ய டெல்லி விரைந்தது தனி படை..!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் வட மாநில தொழிலாளர்கள் அதிக அளவில் வேலை செய்து வரும் நிலையில் அவர்கள் இங்கு தாக்கப்படுவதாக சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவியது. ஆனால் அவ்வாறு யாரும் தாக்கப்படவில்லை என தமிழக காவல்துறை விளக்கம் அளித்து இருந்த நிலையில் பல வட மாநிலத் தொழிலாளர்கள் தங்களின் சொந்த மாநிலங்களுக்கு திரும்பிச் செல்ல ஆரம்பித்துள்ளனர்.

இதற்கிடையே தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு "புலம்பெயர் தொழிலாளர்கள் பற்றி வதந்தி பரப்புவோர் இந்திய நாட்டிற்கே எதிரானவர்கள். அவர்கள் அனைவரும் ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் குந்தகம் விளைவிப்பவர்கள். புலம்பெயர் தொழிலாளர்களை வைத்து சிலர் கீழ்த்தனமான அரசியலை செய்தது கடும் கண்டனத்திற்குரியது" என தனது அறிக்கையின் மூலம் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான தகவல் தொடர்பாக வதந்தி பரப்பவர்கள் மீது பொது அமைதிக்கு குந்தகம் இப்போது சமூக வலைதளங்களில் வதந்தி பரப்பது உட்பட நான்கு பிரிவினரின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவ் மீது தூத்துக்குடி மாவட்ட போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

ஹைதராபாத்தில் இரு நபர்களிடையே நடந்த மோதலை தமிழ்நாட்டில் நடந்த முதல் ஆக சித்தரித்து வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகியின் செயல் தொடக்கப் புள்ளியாக அமைந்துள்ளது என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து பாஜக நிர்வாகி பிரசாந்த் உம்ராவை கைது செய்ய திருச்செந்தூர் டிஎஸ்பி வசந்த ராஜ் தலைமையிலான ஏழு பேர் கொண்ட தனிப்படை போலீசார். டெல்லி விரைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN special force going delhi to arrest BJP executive


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!


செய்திகள்



Seithipunal
--> -->