இது அரசியல் படுகொலை இல்லை - சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பரபரப்பு பேட்டி! - Seithipunal
Seithipunal


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் விளக்கம் அளித்து உள்ளார்.

தற்போது வரை விசாரணை நடத்தியதில் ஆம்ஸ்ட்ராங் கொலை பின்னணியில் அரசியல் காரணங்கள் எதுவும் இல்லை. இதுவரை விசாரணையில் கிடைத்த தகவல்களை மட்டுமே கூறியுள்ளோம். முழுமையான விசாரணைக்குப் பிறகே கொலைக்கான காரணம் தெரிய வரும் என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.

சற்றுமுன் சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலத்தில் சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் செய்தியாளர்களை சந்தித்து தெரிவித்தாவது, பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங்-ஐ அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் தாக்கினர்.

இதுகுறித்து செம்பியம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த கொலை வழக்கு தொடர்பாக 8 நபர்கள் கைது செய்யப்பட்டு, புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசியல் ரீதியாக பழிக்கு பழியாக இந்த கொலை நடைபெறவில்லை. ஆம்ஸ்ட்ராங் கொலை தொடர்பாக பல கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொலை தொடர்பான முழு விசாரணை நடத்திய பிறகு தான் உண்மை காரணம் தெரிய வரும். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதான பலர் மீதும் பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. 

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 3 மணி நேரத்திற்குள் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆற்காடு புன்னை பாலா, திருமலை, திருவேங்கடம் உள்ளிட்டோர் மீது உள்ள மற்ற வழக்குகள் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

10 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளனர். கொலை வழக்கில் தொடர்புடைய மற்ற நபர்களை பிடிக்க தீவிர விசாரணை மற்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தற்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது. முக்கிய இடங்களில் தேவையான பாதுகாப்பு தரப்பட்டுள்ளது. கொலைக்கு பயன்படுத்திய வாகனங்கள், ஆயுதங்கள் உள்ளிட்டவர்கள் குறித்து தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. 

கொலை வழக்கில் தொடர்புடையோருக்கு உரிய தண்டனை கிடைக்கும் படி நடவடிக்கை எடுப்போம். ஆம்ஸ்ட்ராங் வைத்திருந்த துப்பாக்கி அவரிடம் தான் இருந்தது. தேர்தல் முடிந்த பிறகு ஜூன் 13ஆம் தேதி அவரிடம் துப்பாக்கி ஒப்படைக்கப்பட்டு விட்டது. தற்போது கைது செய்யப்பட்டுள்ள ஆற்காடு பாலா மீது ஏற்கனவே நான்கு வழக்குகள் நிலுவையில் உள்ளன" என்று சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TN Police SandeepRaiRathore say about BSP Armstrong hacked to death


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->