தலைக்கவசம் அணியாத காவலர்களுக்கு கடும் நடவடிக்கை: டிஜிபி அதிரடி உத்தரவு!
TN Police Helmet Tamilnadu
இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்வதை தடுக்க பொதுமக்கள் மீது காவல்துறையினர் அபராதம் விதித்து வருகிறார்கள். ஆனால், அதே காவலர்கள் தான் விதிமுறைகளை மீறி தலைக்கவசமின்றி பயணிப்பது குறித்து மக்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பகிர்ந்துவருவதால், காவல்துறையின் மதிப்பு குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த சூழலில், தலைக்கவசமின்றி வாகனத்தில் பயணிக்கும் காவலர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால் மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
மேலும், காவல் நிலையங்களில் காலை கூட்டத்தின் போது, இருசக்கர வாகனத்தில் வரும் காவலர்கள் தலைக்கவசம் அணிந்திருப்பதை மேல் அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. தலைக்கவசமின்றி வரும் காவலர்களின் வாகன சாவியை பறிமுதல் செய்து, ISI சான்று பெற்ற ஹெல்மெட்டுடன் திரும்பி வந்த பின்னரே சாவியை வழங்க வேண்டும் என்பதும் உத்தரவில் சேர்க்கப்பட்டுள்ளது.
அத்துடன், நான்கு சக்கர வாகனங்களில் பயணிக்கும் காவலர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
English Summary
TN Police Helmet Tamilnadu