தமிழகத்தில் முக கவசம் அணியும் பதற்றமான நிலையா? உண்மை என்ன? அமைச்சர் பேட்டி! - Seithipunal
Seithipunal


Minister Ma Subramanian fever mask 
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு விடயங்களைத் தெளிவுபடுத்தினார்.

அவர் கூறியதாவது: தமிழகத்தில் எந்த புதிய தொற்றுநோயும் பரவவில்லை. பொதுமக்கள் மாஸ்க் அணிய வேண்டும் என்கிற கட்டாய நிலையும் இல்லை. தற்போது காணப்படுவது பருவமழை காலத்தில் வழக்கமாகவே ஏற்படும் காய்ச்சல் மற்றும் பிற நோய்தான்; அதற்காக மக்கள் அச்சப்படத் தேவையில்லை.

கேரளாவில் சுகாதாரமற்ற நீர்நிலைகளின் காரணமாக “மூளையைத் தின்னும் அமீபா” என்ற தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் இதுவரை அந்த நோய் எவருக்கும் ஏற்படவில்லை என்று அவர் உறுதிப்படுத்தினார். எனவே அந்த நோய் தமிழ்நாட்டில் பரவுகிறது என்ற வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்றும் கூறினார்.

மேலும், பொருளாதார தொடர்பான ஒரு கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், ஜி.எஸ்.டி. வரியை முன்னர் உயர்த்தியது பாஜக அரசு தான், தற்போது அதைக் குறைத்திருப்பதும் அதே பாஜக அரசு தான் என்றார்.

அதனால், தமிழகத்தில் எந்தவித அச்சமும் இல்லை, மக்கள் வழக்கமான சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றினால் போதுமானது எனவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

TN Minister Ma Su Say About Face Mask


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->