அரசு அதிகாரிகளின் பதவி உயர்வுக்கு இனி முதல்வரின் ஒப்புதல் கட்டாயம்: புதிய அரசாணை வெளியீடு!
TN Govt Mandates CM Approval for Bureaucrats Promotions Issues New Guidelines
தமிழ்நாடு அரசு அதிகாரிகள் மற்றும் பணியாளர்களின் பதவி உயர்வுக்கான (Promotion Panel Guidelines) நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிட்டுப் புதிய அரசாணையைத் தமிழக அரசு பிறப்பித்துள்ளது.
புதிய நெறிமுறைகள் & முதலமைச்சர் ஒப்புதல்
முதல்வர் ஒப்புதல் கட்டாயம்: இதுவரை துறைச் செயலாளர்கள், மனிதவள மேலாண்மைத் துறை மற்றும் அமைச்சர்களின் ஒப்புதலோடு வழங்கப்பட்ட பதவி உயர்வுகள், இனி தலைமைச் செயலாளர் மற்றும் முதலமைச்சரின் நேரடி ஒப்புதலைப் பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
5 ஆண்டு பணிப்பதிவு ஆய்வு: பதவி உயர்வுக்குப் பரிசீலிக்கப்படும் அதிகாரியின் முந்தைய 5 ஆண்டுகாலப் பணிப் பதிவுகள், ஒழுங்கு நடவடிக்கைகள் மற்றும் தண்டனைகள் முழுமையாகச் சரிபார்க்கப்படும்.
விதி 17 (b) கட்டுப்பாடு: கடுமையான குற்றச்சாட்டுகள் நிலுவையில் இருந்தாலோ, தற்காலிகப் பணிநீக்கத்தில் இருந்தாலோ தகுதிப் பட்டியலில் பெயர் சேர்ப்பது தள்ளி வைக்கப்படும். ஆனால், ஆரம்பக்கட்ட விசாரணைகள் தடையாக இருக்காது.
நிர்வாகத் தாமதத்தைத் தவிர்க்க நடவடிக்கை
காலிப்பணியிட மதிப்பீடு: காலிப்பணியிடங்கள் ஏற்படுவதற்கு 2 மாதங்களுக்கு முன்பே அதற்கான மதிப்பீடுகளை அரசுக்கு அனுப்ப வேண்டும்.
ஓய்வுக்கு முன் பதவி உயர்வு: தகுதியான அதிகாரிகள் பணி ஓய்வு பெறுவதற்கு முன்பாகவே அவர்களுக்குரிய பதவி உயர்வு ஆணை கிடைப்பதைத் துறைச் செயலாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
English Summary
TN Govt Mandates CM Approval for Bureaucrats Promotions Issues New Guidelines